மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை தெற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி கட்டிடம் ஒன்று உள்ளது.
இந்த கட்டிடத்தில் மும்பை செஷென்ஸ் நீதிமன்றமும் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 7.14 மணியளவில் இந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தீயை அணைக்க தீ அணைப்பு துறையினர் 5 பேர் ஈடுபட்டுள்ளனர். மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Visuals from Mumbai: Fire doused at Mumbai Sessions Court premises located at Karamveer Bhaurao Marg, no casualties reported pic.twitter.com/CpqAurOohI
— ANI (@ANI) January 8, 2018