புதுடெல்லி: காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு (Article 370) நீக்கப்பட்டதால், ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kashmir) விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகளும் அடுத்த திங்கள் (அக்டோபர் 14) முதல் ஜம்மு-காஷ்மீரில் மீட்டமைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் இந்த தகவலை இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 25 இண்டர்நெட் கியோஸ்க்கள் இயக்கப்படுகின்றன என்று செய்தியாளர் கூட்டத்தில் கன்சால் கூறினார். பயண ஆலோசனையும் இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆப்பிள் விலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறிகையில், அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் போன்களும் அக்டோபர் 14 முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறினார். இந்த வசதி முதலில் 10 மாவட்டங்களில் தொடங்கப்படும். ஆகஸ்ட் 5 முதல் சில நாட்களாக தொலைபேசி சேவை தடை செய்யப்பட்டது. ஆனால் அவை இப்போது மெதுவாக அகற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். மேலும், 11 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. அவை அனைத்தும் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.