மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு!! ஜூலை 29 வரை கொல்கத்தாவிலிருந்து விமான சேவை கிடையாது

தலைநகர் கொல்கத்தாவில் COVID-19 அதிக அளவில் பரவியதற்கு முக்கிய காரணம் விமானங்கள் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி "அதிருப்தி" தெரிவித்திருந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2020, 05:47 PM IST
மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு!! ஜூலை 29 வரை கொல்கத்தாவிலிருந்து விமான சேவை கிடையாது title=

West Bengal Lockdown Latest News: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு (Lockdown) விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை கொல்கத்தாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் எதுவும் இயங்காது என்று கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தனர். 

ஜூலை 25 சனி முதல் ஜூலை 29 புதன்கிழமை மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அரசாங்கத்தால் மாநில அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது, ​​இந்த நாட்களில் மேற்கு வங்காளத்தின் எந்தவொரு விமான நிலையத்திலும் விமானங்கள் இருக்காது.

நேற்று மாலை, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைநகரில் COVID-19 தொற்று பரவியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விமான நிலையங்கள் என "அதிருப்தி" தெரிவித்திருந்தார். ஏற்கனவே மாநிலத்தில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்று மேலும் விமான பயண சேவையை தடை செய்துள்ளார். 

மேற்கு வங்க (West Bengal Govt) அரசு ஏற்கனவே மும்பை, புனே, நாக்பூர், டெல்லி, சூரத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தற்போது ஜூலை 31 வரை இந்த தடையை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள் - Covid-19 Lockdown: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு காலத்தை ஜூலை 31 வரை நீட்டிக்கிறது

எவ்வாறாயினும், விமான பயணத்தை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் முடிவுக்கு கோபத்தை வெளிப்படுத்திய பானர்ஜி, நடப்பு மாதத்தின் 25 முதல் 29 ஆம் தேதி வரை அனைத்து விமானங்களையும் இயக்குவதை நிறுத்துமாறு சிவில் விமான அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படியுங்கள் - மேற்கு வங்கத்தில் அழிவை ஏற்படுத்திய ஆம்பன் புயல்; அரசாங்கத்திற்கு உதவ ராணுவம் தயார்

Trending News