பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் முயற்சியில் கர்நாடகா காவல்துறை!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கர்நாடகாவின் கடக்(Gadak) காவல்துறை ஒரு தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளது. 

Last Updated : Dec 8, 2019, 03:15 PM IST
  • இரவில் தனியாக செல்லும் பெண்கள் எந்த காவல் நிலைய தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம் அல்லது கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்.
  • அழைப்பு வந்தவுடம் அருகில் இருக்கும் காவல்நிலைய அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று, பெண்களை அழைத்து கொண்டு அவர்களது வீட்டிற்கு பத்திமாக கொண்டு சென்று விடுவர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் முயற்சியில் கர்நாடகா காவல்துறை! title=

பெங்களூர்: நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கர்நாடகாவின் கடக்(Gadak) காவல்துறை ஒரு தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளது. 

கடக் காவல்துறையினர் இரவில் தனியாக செல்லும் பெண்களை அவர்கள் வீட்டில் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். கர்நாடகா காவல்துறை இந்த பணியினை முற்றிலும் இலவசமாக செய்து வருகிறது. இந்த புது திட்டத்தின் மூலம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, பெண்களை பாதுகாப்பாக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கடக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., 'இரவில் தனியாக செல்லும் பெண்கள் எந்த காவல் நிலைய தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம் அல்லது கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அழைப்பு வந்தவுடம் அருகில் இருக்கும் காவல்நிலைய அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று, பெண்களை அழைத்து கொண்டு அவர்களது வீட்டிற்கு பத்திமாக கொண்டு சென்று விடுவர்.

'ஹைதராபாத்தில் ஒரு பெண் கால்நடை மருத்துவரை நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் நாட்டில் இந்த மாற்றம் ஏற்ப்பட்டு வருகிறது. நாடெங்கிலும் உள்ள காவல்துறையினர் இத்தகு சிறப்பு முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.  ஹைதராபாத் வழக்கினை போன்று உன்னாவோவிலும் ஒரு பாலியல் பலாத்காரம் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட இளம்பெண்னை பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் எரித்து கொண்றுள்ளனர். இந்த இரு சம்பவங்களும் தற்போது நாட்டில் பெருமளவு சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

முன்னதாக உத்திரபிரதேச மாநிலம் பரேலி நிர்வாகம் பெண்களைப் பாதுகாக்கும் முயற்சியைத் தொடங்கும் விதமாக, பெண்களுக்கு சிறப்பு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது. மன உளைச்சலுக்குள்ளான பெண்கள் மற்றும் பெண்கள் 7035004602 என்ற தொலைபேசி எண்ணில் எந்த நேரத்திலும் புகார் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News