நீதிபதிகளை நியமிப்பதில் அரசு தபால்காரராக இருக்கக்கூடாது: ரவிசங்கர் பிரசாத்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசு ஒன்றும் போஸ்ட்மேன் அல்ல என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Dec 5, 2019, 06:58 AM IST
நீதிபதிகளை நியமிப்பதில் அரசு தபால்காரராக இருக்கக்கூடாது: ரவிசங்கர் பிரசாத் title=

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசு ஒன்றும் போஸ்ட்மேன் அல்ல என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!!

டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கம் ஒரு தபால்காரராக இருக்காது; ஒரு பங்குதாரராக இருக்க வேண்டும், அது குறித்து ஒரு கருத்து இருக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை வலியுறுத்தினார். மேலும், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் போது ஒரு செயல்முறை உள்ளது என்றும், நீதிபதிகள் நியமனம் செய்ய மூத்த நீதிபதிகளின் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு பெயர்களை பரிந்துரைக்கிறது என்றும் பிரசாத் கூறினார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யான் பானர்ஜி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன நடைமுறையில், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கும் என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறிய ரவிசங்கர் பிரசாத், இவ்விவகாரதில் மத்திய அரசு வெறும் போஸ்ட்மேன் கிடையாது. இதில் கருத்து கூற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம்தான் முடிவு செய்கிறது.

கொலீஜியத்தில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளே உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் பரிந்துரைக்கும் நபரையே நீதிபதியாக அரசு நியமிக்கிறது. நீதிபதிகள் நியமிக்கப்படும் விவகாரத்தில் நாங்களும் பங்குதாரர்கள் தான். நாங்களும் எங்களது கருத்துக்களை நிச்சயம் கூறுவோம் என்றார். 

 

Trending News