அயோத்தியில் கோலாகலமாக ராமநவமி கொண்டாட ஏற்பாடு.. ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல்!

Grand Ram Navami Celebrations in Ayodhya: அயோத்தியில் வெகு கோலாகலமாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் தெரிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2024, 04:44 PM IST
  • குழந்தை ராமரின் பிறந்த திருநாளான ராம நவமி.
  • ராம நவமியையொட்டி பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் தரிசனம் செய்ய கோயிலுக்கு வருவார்கள்.
  • ராமநவமி திருநாளில் சிறப்பு தரிசன முறை ரத்து.
அயோத்தியில் கோலாகலமாக ராமநவமி கொண்டாட ஏற்பாடு.. ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல்! title=

Grand Ram Navami Celebrations in Ayodhya: நாடு முழுவதும், ராம நவமி விழா ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்பட உள்ள நிலையில், அயோத்தியில் விமரிசையாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்படுவதையொட்டி, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகுந்த உற்சாகத்துடன் ராம ஜென்மபூமி கோயில் அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருகிறது” என்று கூறினார்.

ராமநவமியை ஒட்டி,, மதியம் 12:16 மணிக்கு ஐந்து நிமிடங்கள் ராமருக்கு சூரிய திலகம் வைக்கும் நிகழ்வு நடைபெறும். ராம் மந்திர் நிர்மாண் சமிதி தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், "ராம நவமி (Ram Navami 2024) அன்று மதியம் 12:16 மணிக்கு ராம்லாலாவின் நெற்றியில் சுமார் 5 நிமிடங்கள் சூரியக் கதிர்கள் விழும், அதற்கான முக்கிய தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

குழந்தை ராமரின் பிறந்த திருநாளான ராம நவமி நண்பகல் வேளையில் கொண்டாடப்பட்டு இறைவனுக்கு பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். புதன்கிழமை மதியம் இறைவனுக்கு பிரசாதமாக அர்பணிக்க 56 வகையான பிரசாதம் பக்தர்களால் தயார் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்

ராம நவமியையொட்டி பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் தரிசனம் செய்ய கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நாளை ராமர் கோயில் அதிகாலை 3.30 மணி முதல் இரவு 11 மணி வரை, 19 மணி நேரம் திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், ராமநவமி திருநாளில் சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பொது தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே தலைவர் என வழிநடத்தப் பார்க்கிறார் மோடி!

மேலும், அயோத்தி நகரம் முழுவதும் 100 LED திரைகள் அமைக்கப்பட்டு ராமர் கோயிலில் நடைபெறும் பூஜை நிலழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பட உள்ளன. இதன் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் வர முடியவில்லை என்றாலும், பொது இடங்களில் இருந்துகொண்டே ஸ்ரீராமரை தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தரிசனத்தின் போது ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்க்க, பக்தர்கள் தங்களது மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News