ஆசியச் சதுரங்கப் போட்டியிலிருந்து சவுமியா விலகல்!

இந்திய வீராங்கனை சவுமியா ஆசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்!

Last Updated : Jun 13, 2018, 08:40 PM IST
ஆசியச் சதுரங்கப் போட்டியிலிருந்து சவுமியா விலகல்! title=

இந்திய வீராங்கனை சவுமியா ஆசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்!

தலையைத் ஹிஜாப் எணப்படும் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஈரானின் கட்டுப்பாட்டால், ஆசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என இந்திய வீராங்கனை சவுமியா தெரிவித்துள்ளார்!

ஈரானின் ஹமடான் நகரில் வரும் ஜூலை 26-ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை ஆசியச் சதுரங்கப் போட்டிகள் நடைபெறுகிறது. இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்கள் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் எணப்படும் துணியால் மூடிக் கொள்ள வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் உள்ளது.

எனவே வெளிநாடுகளில் இருந்து போட்டிகளில் பங்கேற் வருவொரும் இந்த வழக்கத்தினை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அடுத்து அங்கு நடைபெறவிருக்கும் ஆசியச் சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொள்ள போவதில்லை என சவுமியா தெரிவித்துள்ளார்.

இத்தகு கட்டுபாடுகள் தனி மனித உரிமையினை மீறுவதாக இருப்பதாக அவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இளையோர் சதுரங்கப் போட்டியின் முன்னாள் உலகச் சாம்பியனான சவுமியா, ஆசியச் சதுரங்கப் போட்டியில் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளார். முன்னதாக கடந்த 2016- ஆம் ஆண்டு இதேபோல் ஈரானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து பங்கேற்காமல் விலகியது குறிப்பிடத்தக்கது.  

Trending News