ஜிஎஸ்டி தொடர்பான நான்கு துணை மசோதாக்களுக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வரும் விதமாக கொண்டுவரப்பட்ட மத்திய சரக்கு-சேவை வரி மசோதா, ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா, யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா, ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய 4 மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார்.