இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக்கை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 2., இவர் பதவியேற்கவுள்ளார் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக புதிய தலைமைக்கான தேடலில் இன்போசிஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், பிரெஞ்ச் ஐடி சர்வீசஸ் நிறுவனமான கேப் ஜெமினியின் நிர்வாகக் குழு உறுப்பினர் சலில் எஸ்.பரேக்கை இன்போசிஸ் தனது தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்துள்ளது.
இவர் தனது முதுகலை பொறியியல் படிப்பினை கணினி அறிவியல் பிரிவில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவினையும் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை ஐஐடியில் ஏரோநாட்டிகல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
#FLASH Infosys names Salil S Parekh as CEO and Managing Director effective January 2: Reuters
— ANI (@ANI) December 2, 2017
புதிய தலைமை நியமனம் தொடர்பாக பேசிய இன்போசிஸ் நிர்வாகக் குழு தலைவர் நந்தன் நிலகேனி, தங்கள் நிறுவனத்திற்கு சலில் எஸ்.பரேக்கின் வருகை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.