140 கோடி மக்களும் எனது குடும்பம்... பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை..!!

செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை பிரதமர் ஏற்ற  பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2023, 10:11 AM IST
  • அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியா மாறும்.
  • நாட்டின் பல கிராமங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர்.
  • கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
140 கோடி மக்களும் எனது குடும்பம்... பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை..!! title=

சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியே விழாக்கோலம் பூண்டது. 77-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய பின் தேசியக்கொடி ஏற்றுவதற்காக செங்கோட்டையை அடைந்தார். பிரதமர் மோடியை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை பிரதமர் ஏற்ற  பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத்தொடரந்து சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி,  “ 140 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமையடைவதாகவும், நாட்டின் விடுதலைக்காக பாடுப்பட்டவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். 2024 பொதுத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தனது கடைசி சுதந்திர தின உரையை ஆற்றும் நிலையில், "எனது அன்புக்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்கள்" என்று உரையை தொடங்கினார். உரை முழுவதும், அவர் நாட்டு மக்களை  தனது குடும்ப உறுப்பினர்கள்" என்றே குறிப்பிட்டார்.

அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக இந்தியா மாறும் என்பது மோடியின் உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூறினார்.

நாட்டின் பல கிராமங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர் என்றும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்த நிறுத்த முடியாத அளவிற்கு வலிமையானதாக உள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், இந்தியா இனி வளர்ச்சி பாதையில் தான் செல்லும் என்று உலக வல்லுநர்கள் கூறுகின்றனர் என்றார் பிரதமர் மோடி.

மேலும் படிக்க - சுதந்திர தினம் 2023: தியாகம், வீரம், நாட்டுப்பற்றின் சாட்சியாய் சுதந்திர இந்தியா..வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்

தனது உரையையில், "குடும்பத்திற்காக, குடும்பத்தால் மற்றும் குடும்பத்திற்காக" என்ற ஃபார்முலாவில் உழைத்து, ஜனநாயகத்திற்கு ஆபத்தான திறமையை புறக்கணிக்கும் கட்சிகள் இந்தியாவில் உள்ளன என வாரிசு அரசியலை அவர் சாடினார்.

நாடு முழுவதும் உள்ள மக்கள் வடகிழக்கு மாநில மக்களுடன் நிற்கிறார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். "முழு நாடும் மணிப்பூர் மக்களுடன் தோள் கொடுத்து நிற்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு அமைதியே ஒரே வழி. மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய மத்திய அரசும் மணிப்பூர் அரசும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன" என்று பிரதமர் மோடி கூறினார்.

 நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகை மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களிலும் மூவண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு கண்ணை கவரும் வகையில் ஒளிர்கின்றன. மாநில தலைமைச் செயலகங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், உயர்நீதிமன்றங்களும் மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க - Independence Day Big Sale: அமேசான், பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி.... மிஸ் பண்ணிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News