ஐதராபாத் பார் ஒன்றில் அரை நிர்வாணமாக ஆட மறுத்து இளம்பெண்ணின் ஆடையை பொதுமக்கள் முன்பு நான்கு காமுகர்கள் அவிழ்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
ஐதராபாத்தின் பன்சன்குட்டா பகுதியில் நடைப்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து இச்செயலில் ஈடுப்பட்ட நான்கு கயவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைம்பெண் சில மாதங்களுக்கு முன்னதாக குறிப்பிட்ட அந்த பாரில் நடன கலைஞராக இனைந்ததாகவும், குடும்ப பொருளாதார நிலை காரணமாக பார் டான்சராக பணியாற்றி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவநாள் அன்று குற்றச்செயலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணினை நிர்வாணமாக நடனமாட சொன்னதாகவும், தங்களுடன் உல்லாசமாக இருக்க அழைத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பார் நிர்வாகம் தெரிவிக்கையில்., சமீபத்தில் இதேப்போன்று பார் நடன கலைஞரை படுக்கைக்கு அழைத்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்று சம்பவங்கள் குறிப்பிட்ட இந்த பாரில் அடிக்கடி நிகழ்வது வழக்கமாகி வருவதாகவும் பார் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் மீதும் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 354, 509, 506, 323, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.