மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிமறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் பதிவு செய்துள்ளார்.
I will be in Bidar, Karnataka to address a public meeting at the Nehru Stadium today, at noon. Later this afternoon and all of tomorrow, I will be in Hyderabad to meet citizens, Congress party workers and leaders.
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2018
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி(வயது 89) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி ஆகஸ்ட் 10-ம் தேதி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை சபாநாயகராக இருந்தார். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, அவர் பதவி விலகவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
10 முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் மிக அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. கடந்த மாதம் திடீரென பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்நிலையில் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.