இந்துக்கள் இந்தியா வராமல் இத்தாலிக்கா செல்வார்கள்? -கிஷன் ரெட்டி!

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் மதத் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்துக்கள் இயல்பாகவே "இந்தியாவுக்கு" தான் வருவார்கள், "இத்தாலிக்கு" செல்ல மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

Last Updated : Jan 2, 2020, 01:02 PM IST
இந்துக்கள் இந்தியா வராமல் இத்தாலிக்கா செல்வார்கள்? -கிஷன் ரெட்டி! title=

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் மதத் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்துக்கள் இயல்பாகவே "இந்தியாவுக்கு" தான் வருவார்கள், "இத்தாலிக்கு" செல்ல மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்பாளர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக கிஷன் ரெட்டி தெரிவிக்கையில்.,  "நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? யாருக்கு எதிராக நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த இந்துக்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் அவர்கள் வேறு எங்கு செல்வார்கள், இத்தாலிக்கா?... அதேப்போல் சீக்கியர்களும் இத்தாலிக்கு செல்ல மாட்டார்கள்," என்று தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் கிஷன் ரெட்டி தெரிவித்த இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், "அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதும் நமது பொறுப்பு". "அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியாவை விட்டு வேறு எங்கு செல்வார்கள்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் அச்சங்களைத் தீர்த்து வைக்கும் ரெட்டி, குடியுரிமை (திருத்த) சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் இல்லை என்று உறுதியளித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "இந்தச் சட்டத்தில் இந்திய முஸ்லீம் அல்லது பிற சமூகங்களுக்கு எதிராக எதுவும் இல்லை. இந்த சட்டம் எந்த மதத்திற்கும் அல்லது குடிமக்களுக்கும் எதிரானது அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்., "ஜனநாயகத்தின் கீழ் எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு முழு உரிமை உண்டு, ஆனால் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன்? சட்டம் யாருக்கு எதிராக செயல்படுகிறது என்று அவர்களால் பதில் அளிக்க முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

"நீங்கள் மனதில்லாமல் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் பொதுச் சொத்துக்களை அழிக்கவும், பேருந்துகள் மற்றும் பிற பொது சொத்துக்களை தீ வைத்துக் கொள்ளவும் உங்களுக்கு உரிமை இல்லை. கல்லை எறிய உங்களுக்கு உரிமை இல்லை," என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமல்படுத்தப்பட்டதிலிருந்து, தேசிய தலைநகர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. 

2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது. 

கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும், இந்த சட்டமானது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என கூறி இதற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News