இதுதான் ஒமிக்ரானின் 3 பெரிய அறிகுறிகள், அலட்சியப்பபடுத்த வேண்டாம்

தற்போது வரை மொத்தமாக 4461 பேருக்கு ஒமிக்ரான் கொடிய வைரஸ் தாக்கியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 02:00 PM IST
இதுதான் ஒமிக்ரானின் 3 பெரிய அறிகுறிகள், அலட்சியப்பபடுத்த வேண்டாம் title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது, கடந்த ஒரு வாரமாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கை பதிவு செய்யப்படுகின்றன. இதற்கிடையில், கோவிட் -19 இன் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பானது நாட்டில் அதிகரித்து வருகின்றன. தற்போது வரை மொத்தமாக 4461 பேருக்கு இந்த கொடிய வைரஸ் தாக்கியுள்ளது. இதற்கிடையில் ஒமிக்ரான் ஆபத்தானது அல்ல என்றாலும், அதிகரித்து வரும் எண்ணிக்கைகவலைக்குரிய முக்கிய விஷயமாக மாறியுள்ளது.

லேசான அறிகுறிகள்
கொரோனா வைரஸின் புதிய வகையான ஒமிக்ரான் (Omicron Symptoms), கோவிட் -19 இன் பழைய வகைகளைப் போல ஆபத்தானது அல்ல என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் கவனக்குறைவாகி, சாதாரண சளி என்று தவறாக நினைக்கிறார்கள். இதுமட்டுமின்றி, மக்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதால், இந்த நோய் தொற்றானது அதிகரித்து வருகிறது.

ALSO READ | Omicron symptoms: இதுதான் ஒமிக்ரானின் ஆபத்தான ஐந்து அறிகுறிகள் 

ஒமிக்ரானின் பொதுவான அறிகுறிகள் என்ன?
ஒமிக்ரானின் வளர்ந்து வரும் தொற்றுநோயைத் தவிர்க்க, அதன் அனைத்து அறிகுறிகளையும் அறிந்திருப்பது அவசியம். டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, இருமல், சோர்வு, கன்ஜெஷன் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை Omicron மாறுபாட்டின் நான்கு பொதுவான அறிகுறிகளாகும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பகுப்பாய்வு மையம் தெரிவித்துள்ளது. லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியரான டிம் ஸ்பெக்டரின் கூற்றுப்படி, லேசான காய்ச்சல், சோர்வு, தொண்டை வலி, உடல்வலி, இரவில் வியர்த்தல் ஆகியவை ஒமிக்ரான் தொற்றின் முக்கிய அறிகுறிகளாக இருக்கும் என்றுள்ளார். 

ஒமிக்ரான் வகைகளின் முக்கிய மூன்று அறிகுறிகள் என்னவென்று பார்போம்.
தொண்டை வலி: தொண்டை புண் (Soar Throat) என்பது ஒமிக்ரான் வகைகளின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இது தொண்டையில் வலி மற்றும் எரிச்சாலை ஏற்படுத்தும். ஒமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிந்த முதல் நபரும் இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, கோவிட்-19 இன் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் லேசான காய்ச்சலுடன் தொண்டை புண் இருப்பதாக கூறுகிறார்கள்.

தலைவலி: தலைவலி என்பது பல காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு நிலை, ஆனால் கோவிட்-19 அல்லது ஒமிக்ரான் மாறுபாட்டைப் பொறுத்த வரையில், அது அதிகாரப்பூர்வ அறிகுறி பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். தலைவலி என்பது ஒரு பொதுவான நோயாகும், இது தொற்றுக்குப் பிறகு உடலில் ஏற்படும் அழற்சியைக் கொடுக்கிறது. 

மூக்கு ஒழுகுதல்: பெரும்பாலான ஒமிக்ரான் அறிகுறிகள் சளி அல்லது காய்ச்சலுடன் ஒத்துப்போவதால், அது கோவிட்-19 ஆ அல்லது ஜலதோஷமா என்ற சந்தேகம் எழும்புகிறது. மூக்கு ஒழுகுதல் என்பது கொரோனா வைரஸுடன் தொடர்புடைய ஒரு அறிகுறியாகும். கோவிட்-19 நோயாளிகளுக்கு மூக்கு ஒழுகுதல் மிகவும் பொதுவான அறிகுறியாக மாறிவிட்டது.

ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News