அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலில், சீக்கியர்கள் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில், இளைஞர் புனித நூலை அவமதித்ததாக கூறி அங்கு பணியமர்த்தப்பட்ட SGPC ஊழியர்கள் குற்றம் சாட்டப்பட்டவரை அடித்து கொன்றனர்
இறந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. அவரது அடையாளத்தை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் எப்போது பொற்கோயிலுக்குள் நுழைந்தார், அவருடன் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து அனைத்து சிசிடிவி கேமராக்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேஜா சிங் சாமுந்தரி ஹாலில் உள்ள எஸ்ஜிபிசி வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏராளமான சீக்கிய பக்தர்களும் பல்வேறு சீக்கிய அமைப்புகளும் SGPC ஊழியரின் இந்த அராஜ செயலை விமர்சித்தனர்.
ALSO READ | இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி
குரு கிரந்த் சாஹிப் என்ற சீக்கியர்களின் புனித நூலை அனைத்து மதத்தினருக்கும் வழிபடலாம் என்று முன்னாள் எஸ்ஜிபிசி தலைவர் பீபி ஜாகிர் கவுர் கூறினார். அங்கு சில சதித்திட்டம் மேற்கொள்ள முயற்சி நடந்துள்ளது. இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். படுகொலை சம்பவம் குறித்து கவலை தெரிவித்த SGPC உறுப்பினர் பாய் குர்பிரீத் சிங் ரந்தாவா, பஞ்சாப் அரசாங்கத்திடம் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ' பொற்கோவிலில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜியிடம் பேசினேன். இச்சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்த அவர், படுகொலைச் சதியை அம்பலப்படுத்த இந்திய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று எஸ்ஜிபிசிக்கு உறுதியளிக்கிறோம் என்றார். இந்த விவகாரத்தில் உடனடியாக பஞ்சாப் முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சர் கூறினார். இந்த சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பஞ்சாப் பிரிவு தலைவர் அஸ்வினி சர்மா இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் அரசை குறை கூறினார். பஞ்சாபில் படுகொலை சம்பவங்களை தடுக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவும் காங்கிரஸ் அரசு மீண்டும் தவறிவிட்டது என்று சர்மா கூறினார். இந்தச் சம்பவத்தை பாஜக வன்மையாகக் கண்டிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அஸ்வினி சர்மா கூறினார்.
ALSO READ | Big Statement: எங்கள் முடிவில் சில தவறுகள் இருக்கலாம்! தளுதளுக்கும் அமித் ஷா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR