முதல்வரை தோற்கடித்த இரண்டாவது அரசியல்வாதி சாரியு ராய்...

2009-ல் அப்போதைய முதலமைச்சர் ஷிபு சோரனை வீழ்த்திய கோபால் கிருஷ்ணா பதாருக்குப் பிறகு, ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் சாரியு ராய், தற்போதைய முதல்வரை தோற்கடித்த மாநிலத்தின் இரண்டாவது அரசியல்வாதியாக பெயர் பெற்றுள்ளார்.

Last Updated : Dec 25, 2019, 08:09 PM IST
முதல்வரை தோற்கடித்த இரண்டாவது அரசியல்வாதி சாரியு ராய்... title=

2009-ல் அப்போதைய முதலமைச்சர் ஷிபு சோரனை வீழ்த்திய கோபால் கிருஷ்ணா பதாருக்குப் பிறகு, ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் சாரியு ராய், தற்போதைய முதல்வரை தோற்கடித்த மாநிலத்தின் இரண்டாவது அரசியல்வாதியாக பெயர் பெற்றுள்ளார்.

பாஜக தனது ஜாம்ஷெட்பூர் (மேற்கு) தொகுதியில் சாரியு ராய்க்கு வாய்ப்பு மறுத்த நிலையிலை, ரகுபார் தாஸ் அமைச்சரவையில் இருந்து விலகி, ஜாம்ஷெட்பூரிலிருந்து (கிழக்கு) தாஸ் சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கினார்.

இந்த தேர்தலில் ராய், ரகுபர் தாஸை 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, அப்போதைய முதல்வரை தோக்கடித்த மாநிலத்தின் இரண்டாவது அரசியல்வாதி எனும் பெருமை பெற்றார்.

ஜாம்ஷெட்பூர் (கிழக்கு) தொகுதி 1995 முதல் ரகுபர் தாஸின் கோட்டையாக இருந்தது, அதே நேரத்தில் சாரியு ராய் அருகிலுள்ள ஜாம்ஷெட்பூர் (மேற்கு) தொகுதியை இரண்டு தடவைகள் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஜார்கண்டின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு முதலமைச்சரின் கீழ் பணியாற்றிய ஒரு தலைவர் தேர்தலில் அவருடன் நேருக்கு நேர் மோதினார்.

சாரியு ராய் கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார இலாகாக்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் கவணித்து வந்தார். தற்போது நிகழ்ந்த அரசியல் கசப்புகளை அடுத்து அவர் ஆளும் ஆட்சியில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார்.

இதற்கு முன்னதாக ஜனவரி 2009-ல், அப்போதைய முதலமைச்சர் ஷிபு சோரன் தமர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கோபால் கிரிஷன் படார் என்று அழைக்கப்பட்ட ராஜா பீட்டரிடம் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க்கடிக்கப்பட்டார்.

ஆகஸ்ட், 2008-ல் முதல்வரான திரு சோரன், பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். தாமார் இடைத்தேர்தலில் அவரது தோல்வி அவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending News