வருமான வரிவிலக்கு 3 லட்சமாக உயர வாய்ப்பு!!

2018-2019-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Jan 10, 2018, 05:16 PM IST
வருமான வரிவிலக்கு 3 லட்சமாக உயர வாய்ப்பு!!  title=

2018-2019-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கவும்.

மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Trending News