ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகன்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது எழுந்த புகார் தொடர்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேவாரி, குர்கான் உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
லாலு பிரசாத்தின் மகளும், இரு மகன்களும் சட்ட விரோதமாக பினாமி பெயர்களில் நிலங்களை வாங்கி ரூ.1000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது. அந்த அடிப்படையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.