இந்தியா - வியட்நாம் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - வியட்நாம் இடையே அணு ஆயுதம், விவசாயம், வர்த்தக ஒத்துழைப்பு என 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Last Updated : Mar 4, 2018, 11:48 AM IST
இந்தியா - வியட்நாம் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து title=

வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குயாங் 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வியட்நாம் அதிபருக்கு வரவேற்பு அளித்தனர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், பிரதமர் மோடியும், வியட்நாம் அதிபர் குயாங்கும், ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து இருநாடுகள் இடையே விவசாயம், பொருளாதார – வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை இருநாடுகளும் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினார். புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலங்கள், விவசாயம், ஜவுளி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளில் இருநாடுகள் ஒத்துழைப்பை வலிமைப்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.

 

 

 

Trending News