2019ல் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் -அருண் ஜெட்லி

2019 ஆம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரம் வலிமை மிக்க 5_வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 30, 2018, 05:10 PM IST
2019ல் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் -அருண் ஜெட்லி
Pic Courtesy : ANI

2019 ஆம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதாரம் வலிமை மிக்க 5_வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். உலக வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.59 டிரில்லியன் அமெரிக்க டாலர்.

காம்பிடிஷன் கமிசன் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "இந்த நடப்பாண்டில், புள்ளிகளின் அளவு அடிப்படையில் பிரான்சை முந்திக்கொண்டுள்ளோம் 6 வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். அடுத்த ஆண்டு நாம் பிரிட்டனை முந்தலாம். எனவே, நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் நாடக உருவெடுக்குவோம்" எனக் கூறினார்.

"நமது நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 7 முதல் 8 சதவிகிதம் வரை வளர்ந்துவிட்டால், 1 முதல் 1.5 சதவிகிதம் வரை வளர்ந்து வரும் பொருளாதாரங்களை முறியடிக்க நமக்கு மிக நீண்ட காலம் தேவையில்லை. 2030 அல்லது 2040 ஆம் ஆண்டுகளில் பார்த்தால், சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் முன்னணி 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்" என்றும் அவர் கூறினார்.

உலகில் உள்ள மற்ற நாடுகளும் மிகக் குறைவான விகிதத்தில் வளர்ந்து வருகின்றன என்றும், இந்தியாவிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் பங்கு சந்தையாக விரிவடையும் போது மேலும் பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்து விடும் என்றும் கூறினார். சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் வர்த்தகப் போர் ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய சவால்களின் மத்தியில் நமது பொருளாதார சிறப்பாக வளர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அருண் ஜேட்லி கூறினார்.

உலக வங்கியின் படி, உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் அமெரிக்கா 19.39 டிரில்லியன் டாலர், சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது (12.23 டிரில்லியன் டாலர்). மூன்றாம் இடத்தில் ஜப்பான் (4.87 டிரில்லியன் டாலர்) மற்றும் நான்காவது இடத்தில் ஜெர்மனி (3.67 டிரில்லியன் டாலர்) உள்ளன.