இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நிலைகுலைந்து விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பாம்ராவுலி என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களில் வீரர்கள் தினமும் பயிற்சி மேற்கொண்ட இரு வீரர்கள் தங்களது ஹெலிகாப்டரை சரிசமமாக இலாத இடத்தில் தரையிறக்க முயன்றனர்.

Last Updated : Mar 15, 2017, 11:14 AM IST
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நிலைகுலைந்து விபத்து title=

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பாம்ராவுலி என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களில் வீரர்கள் தினமும் பயிற்சி மேற்கொண்ட இரு வீரர்கள் தங்களது ஹெலிகாப்டரை சரிசமமாக இலாத இடத்தில் தரையிறக்க முயன்றனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்  தீடீரென வேகமாக தரையில் மோதி நிலைகுலைந்து சரிந்தது. அதிர்ஷ்டவசமாக இரு வீரர்களும் அவசர கதவின் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர். 

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் சேதமடைந்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Trending News