ISRO EOS 08 Satellite Launch Latest News Updates: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இ.ஓ.எஸ்-08 (EOS 08) எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 (SSLV D-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. EOS-08 செயற்கைக்கோள், SR-0 DEMOSAT உடன் விண்ணில் ஏவப்பட்டு ஏறக்குறைய 17 நிமிடங்களுக்குப் பிறகு, 475 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
மூன்று நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இந்த ராக்கெட் (ஆக. 15) நேற்று விண்ணில் ஏவப்பட இருந்தது. இருப்பினும், சில காரணங்களுக்காக இன்று ஒத்திவைக்கப்பட்டது. SSLV ராக்கெட் தொழில்நுட்பம் தொடக்க கட்டத்தில் இருந்தாலும், இஸ்ரோவின் இந்த நடவடிக்கை அதன் உச்சத்தை குறிக்கிறது எனலாம். விண்வெளிக்கு குறைந்த செலவில் செயற்கைகோள் அனுப்புவதற்கான முயற்சிகளில் இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க முயற்சி இதுவாகும்.
EOS 08 என்றால் என்ன?
இஓஎஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளின் ஓராண்டு வரை தாக்குபிடிக்கும்.
மேலும் படிக்க | சுதந்திர தினம், குடியரசு தினம் கொடியேற்றுவதில் இந்த வித்தியாசத்தை கவனிச்சீங்களா?
இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மதிப்பு உயரும்
EOIR பேலோட் மிட்-வேவ் மற்றும் லாங்-வேவ் அகச்சிவப்பு பட்டைகள் ஆகிய இரண்டு உள்ளன. இவை விண்வெளியில் இருந்து படங்களைப் பிடிக்கும், இது பகல் மற்றும் இரவு நேரங்களில் திறம்பட செயல்பட உதவுகிறது.
மிட்-வேவ் அகச்சிவப்பு (MWIR) மற்றும் நீண்ட அலை அகச்சிவப்பு (LWIR) ஆகியவை நம் கண்களால் பார்க்க முடியாதவை ஆகும். ஆனால் வெப்பமாக உணரக்கூடிய ஒளி வகைகள். செயற்கைக்கோள்கள் பூமியை ஆய்வு செய்ய இந்த வகையான ஒளியைப் பயன்படுத்துகின்றன.
SSLV-D3 ராக்கெட் என்பது செயற்கைக்கோள் மெயின்பிரேம் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் தென்பட்டுள்ளது. இந்த SSLV ராக்கெட் மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததன் மூலம் மினி, மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு பெரிய தீர்வை இஸ்ரோ கண்டடைந்துள்ளது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி சமூகத்தில் இஸ்ரோ தனி மதிப்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இருந்து குறைந்த விலையில் விண்ணில் செயற்கைக்கோள்களை செலுத்த இனி பல நாடுகள் இஸ்ரோவை நாடும். இதனால், சர்வதேச விண்வெளி அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ