J&K: ஷோபியன் என்கவுண்டரில் 2 JeM பயங்கரவாதி சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியன் பகுதியில் 2 JeM பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை!!

Last Updated : Jul 27, 2019, 11:38 AM IST
J&K: ஷோபியன் என்கவுண்டரில் 2 JeM பயங்கரவாதி சுட்டுக்கொலை.. title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியன் பகுதியில் 2 JeM பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியன் மாவட்டத்தின் போனா பஜார் பகுதியில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் இறந்ததாக கூறப்படுகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியன் மாவட்டத்தின் போனா பஜார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இந்திய இராணுவத்தின் 23 பாரா மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOC) ஷோபியனின் கூட்டுக் குழு இப்பகுதியில் ஒரு வளைவு மற்றும் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. படைகள் அந்த இடத்தை நெருங்கியபோது, அந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் போனா பஜார் பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர். இதையடுத்து, பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, வெளிவரும் தகவல்களின்படி, கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட முன்னா லஹோரி மற்றும் உள்ளூர் ஜீனத் உல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் வசமிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

புல்வாமாவின் அரிஹால் கிராமத்தில் 2018 ஜூன் மாதம் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சூத்திரதாரி லஹோரி என்ற ஐ.இ.டி நிபுணர் என்று கூறப்படுகிறது. இந்த வளர்ச்சியை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

 

Trending News