Jet Airways விமானம் ரத்தான விவகாரம்... விமானிகள் தான் காரணமா

இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 14 விமானங்களை ரத்து செய்தற்கான காரணம் பயணிகளுடனான கருத்துவேறுபாடு இல்லை, தொழில்நுட்க காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது!

Last Updated : Dec 3, 2018, 11:46 AM IST
Jet Airways விமானம் ரத்தான விவகாரம்... விமானிகள் தான் காரணமா title=

இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 14 விமானங்களை ரத்து செய்தற்கான காரணம் பயணிகளுடனான கருத்துவேறுபாடு இல்லை, தொழில்நுட்க காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 14 விமானங்களின் சேவைக்கள் டிசம்பர் 2-ஆம் நாள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதற்கு விமானிகளுக்கு பாக்கி வைக்கப்பட்டிருக்கும் சம்பளப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது மூத்த அதிகாரிகளுக்கும் விமானிகள் பலருக்கும் சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக ஜெட் ஏர்வேஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், "எங்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் விமானிகளிடம் நிலவி வரும் சம்பளப் பிரச்னை குறித்து நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். டிசம்பர் 2-ஆம் தேதியிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, ஆனால் விமானிகளுடனான பிரச்சனை மட்டும் காரணம் இல்லை" என குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து NAG  என்று சொல்லப்படும் விமானிகள் அமைப்பிடம் தெரியபடுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் தரப்பு கூறுகையில், தங்கள் நிறுவனத்துக்குக் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அவர்களது ஆதரவை தங்களுக்கு வழங்கி வருகின்றனர். அவர்களின் குறைகளை நேரடியாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலமும் எங்களுக்குத் தெரியபடுத்தியுள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Trending News