Jharkhand Assembly Election 2024 Key Point: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அக்டோபர் 15, 2024 அன்று ஜார்க்கண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்தது. அதன்படி நாளை முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து முழு விவரத்தை பார்ப்போம்.
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணையின்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது, முதல் கட்டத்தில் 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13-ம் தேதியும், இரண்டாம் கட்டத்தில் 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு என்னைக்கை நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பப்டும்.
முதல் கட்டம்: 43 தொகுதிகள் (நவம்பர் 13)
இரண்டாம் கட்டம்: 38 தொகுதிகள் (நவம்பர் 20)
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: இந்தியா கூட்டணி vs என்.டி.ஏ கூட்டணி
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்திய கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறதுக்.
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தொகுதிகள் விவரம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 மாவட்டங்களில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், 44 பொது தொகுதிகள்,
28 பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி), மற்றும் ஒன்பது தாழ்த்தப்பட்ட பட்டியல் மக்களுக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி 47 இடங்களை கைப்பற்றியது.
பொது தொகுதிகள்: 44
பட்டியல் பழங்குடியினர் தொகுதிகள்: 28
பட்டியல் இனத்தவர்கள் தொகுதிகள்: 9
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் முதல் கட்டத்தில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இரண்டாவது கட்டத்தில் 528 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் தலைவிதி நவம்பர் 23-ம் தேதி முடிவு செய்யப்படும்.
முதற்கட்ட தேர்தல்: 683 வேட்பாளர்கள்
இரண்டாம் கட்ட தேர்தல்: 528 வேட்பாளர்கள்
ஜார்கண்ட் மாநில வாக்காளர்கள் விவரம்
ஜார்கண்ட் மாநிலத்தில் 1.31 கோடி ஆண்கள், 1.28 கோடி பெண்கள் என மொத்தம் 2.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் 11.05 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் (18-19 வயது) மற்றும் 1.14 லட்சம் 85+ மூத்த குடிமக்கள் மற்றும் 3.64 லட்சம் மாற்றுத்திறனாளிகள் (ஊனமுற்றோர்) வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்: 2.59 கோடி
ஆண் வாக்காளர்கள்: 1.31 கோடி
பெண் வாக்காளர்கள்: 1.28 கோடி
மாற்றுத்திறனாளிகள்: 3.64 லட்சம்
மூத்த குடிமக்கள்: 1.14 லட்சம்
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிகள் விவரம்
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்காக 20,276 இடங்களில் மொத்தம் 29,562 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இவற்றில் 24,520 கிராமப்புறங்களிலும், 5,042 நகர்ப்புற வாக்குச்சாவடிகளிலும், அதாவது சராசரியாக ஒரு வாக்குச்சாவடிக்கு 872 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்.
மொத்த வாக்குச் சாவடிகள்: 29,562
நகர்ப்புற வாக்குச் சாவடிகள்: 5,042
கிராமப்புற வாக்குச் சாவடிகள்: 24,520
மாற்றுத்திறனாளிகளால் (PwD) நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள்: 48
முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள் (பிங்க் பூத்கள்): 1,271
இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள்: 139.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ