ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும்; முடிவு டிசம்பர் 23: ECI

நவம்பர் 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என அறிவிப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 1, 2019, 05:19 PM IST
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும்; முடிவு டிசம்பர் 23: ECI title=

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இன்று டெல்லியில் தேர்தல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் நடைபெற உள்ள தேதிகளை அறிவித்தார். 81 சட்டசபை இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மொத்தம் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்றும், தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23 அன்று அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

நவம்பர் 30 ஆம் தேதி முதல் கட்டமாக 13 சட்டமன்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 7 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், டிசம்பர் 12 ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும், டிசம்பர் 16 ஆம் தேதி நான்காம் கட்டமாகவும், டிசம்பர் 20 ஆம் தேதி ஐந்தாவது கட்டம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் 19 மாவட்டங்கள் நக்சலைட்களால் பாதிக்கப்பட்டுள்ளன தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முதல் முறையாக தபால்வாக்கு முறை கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன்மூலம் இவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

சமீபத்தில், ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் தேர்தல் ஆணையக் குழு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஒரு சந்திப்பை நடத்தியது. இந்த கூட்டத்தில் தேர்தல்களை குறைந்த கட்டங்களில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் பின்னர், தேர்தல் ஆணைக் குழு அனைத்து மாவட்டத்தின் எஸ்.பி., டி.எம் மற்றும் டி.ஜி.பி.யுடன் ஒரு சந்திப்பை நடத்தி தேர்தலுக்கான ஏற்பாடுகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டது.

ஜார்க்கண்டில் மொத்தம் 81 சட்டசபை இடங்கள் உள்ளன. 2014 சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 49 இடங்களை கைப்பற்றி ராகுவர் தாஸ் முதலமைச்சரானார். அதே நேரத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி 17 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இது தவிர, பாபு லால் மராண்டியின் கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டுமே வென்றது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெறும் ஐந்து இடங்களில் மட்டும் சமரசம் செய்ய வேண்டியிருந்தது.

Trending News