புது டெல்லி: ஜார்க்கண்டில் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்டமாக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிப்பு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத்தில் 231 ஆண் மற்றும் 29 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 5784 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 1844 வாக்கு சாவடிகள் நக்சலைட் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இரண்டாவது கட்டத்தில் பாஜக, ஜேவிஎம் 20-20 இடங்களில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில், ஜே.எம்.எம் -14, ஏ.ஜே.எஸ்.யு -2, காங்கிரஸ் -6 என்ற கணக்கில் களத்தில் உள்ளன. அதே நேரத்தில், பல தலைவர்களின் நற்பெயர் இரண்டாம் கட்டத்தில் ஆபத்தில் உள்ளது. இதில் முதலமைச்சர் ரகுவர் தாஸின் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியும் அடங்கும், மாநிலத்தின் 20 இடங்களில் மொத்தம் 260 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதாவது சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடந்தது. ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 6, ஜேஎம்எம் 4, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிட்டன. பாஜக 12 தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்த முறை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. தனித்தும், காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. 2000 ஆம் ஆண்டில் மாநிலம் செதுக்கப்பட்ட பின்னர் இது ஜார்க்கண்டில் நடைபெறும் நான்காவது சட்டமன்றத் தேர்தலாகும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.