முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய கடந்த மாதம் 9-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால், அவர் திடிரென தலை மறைவானார். எனவே கொல்கத்தா போலீஸ் தனிப்படை அமைத்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று கோவையில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட ன் நீதிபதி கர்ணன் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.
இன்று கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவர் சார்பில் வக்கீல் இன்று மனுதாக்கல் செய்தார்.
அப்போது கர்ணனின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு தான் அவருக்கு தண்டனை விதித்தது. எனவே அந்த சிறப்பு அமர்வுதான் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியும் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே 2 முறை நீதிபதி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.