கர்நாடகாவில் இந்திரா உணவகத்தை அடுத்து சவிருச்சி உணவகம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் வருவதையொட்டி ஆளும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது!

ANI | Updated: Feb 27, 2018, 12:32 PM IST
கர்நாடகாவில் இந்திரா உணவகத்தை அடுத்து சவிருச்சி உணவகம்!
Pic Courtesy: twitter/@CMofKarnataka

கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் வருவதையொட்டி ஆளும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது!

அந்த வகையில் இன்று "சவிருச்சி" மொபைல் கேண்டின் திட்டத்தினை மகளிர் சுய உதவி குழுக்களுக்காக அறிமுகம் செய்துள்ளார். முன்னதாக கர்நாடக அரசின் மூலம் "இந்திரா உணவகம்" என்னும் பெயரில் குறைந்த விலை உணவகம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வாகனங்களின் மூலம் இயக்கப்படும் மொபைல் உணவகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாற்றுத்திறனாளி-களுக்கு இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவின் விதன்சதாவில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது. இன்று நடைப்பெற்ற இந்நிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் பதிவிட்டுள்ளார்.