Video: கேரள அரசின் வெகுமதியை ஏற்க மறுக்கும் கேரள மீனவர்கள்!

கேரளா மீனவர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்த பணத்தை, மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2018, 12:59 PM IST
Video: கேரள அரசின் வெகுமதியை ஏற்க மறுக்கும் கேரள மீனவர்கள்! title=

திருவனந்தபுரம்: கேரளா மீனவர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்த பணத்தை, மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்!

கேரளாவில் பொய்த மழையின் காரணமாக வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவம் ஒருபுரம் போராடி வர, மற்றொரு பக்கம் அவர்களுக்கு உதவும் வகையில் கேரள மீனவர்கள் தங்களது சொந்த படகுகளை கொண்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து மீட்பு பணியில் ஈடுப்பட்ட மீனவர்களை பாராட்டும் வகையில், மீனவர்களுக்கு தலா 3000 ரூபாய் பணமும், சேதமடைந்த படகுகளை அரசு செலவில் சரி செய்து தரப்படும் எனவும் கேரள முதல்வர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை அடுத்து, கேரள மீனவர்கள் பலரும் தங்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்த ரூ.3000 பணத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளனரல். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சகோதர, சகோதரிகள். அவர்களை காப்பாற்ற கூலி வாங்குவது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளனர். 

Trending News