சினிமா பாணியில் 10 ரூபாய் நோட்டின் மூலம் லஞ்சம் கொடுத்தது எப்படி தெரியுமா?

சினிமா பாணியில் 10 ரூபாய் நோட்டின் மூலம் லஞ்சம் கொடுத்தது எப்படி தெரியுமா? அதுவும் ரயில்வே துறையில் அதிகாரிக்கு இப்படி கொடுத்திருக்கிறார்கள்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 14, 2020, 03:11 PM IST
  • சினிமா பாணியில் லஞ்சம் கொடுத்தது எப்படி தெரியுமா?
  • ரயில்வே துறையில் நடைபெற்ற ஊழலில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு.
  • பத்து ரூபாய் நோட்டை அடிப்படையாகக் கொண்ட லஞ்ச ஊழல்.
சினிமா பாணியில் 10 ரூபாய் நோட்டின் மூலம் லஞ்சம் கொடுத்தது எப்படி தெரியுமா?

புது தில்லி: ரயில்வேத் துறையில் நடைபெற்ற லஞ்ச ஊழல் சம்பவம் வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது. பழைய சினிமா படங்களில் காண்பிக்கப்பட்ட வழிகளை பயன்படுத்தி லஞ்சம் பெறப்பட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாக திரைப்படங்களில், வில்லன் தன்னிடம் உள்ள ரூபாய் நோட்டின் ஒரு பகுதியை தன்னிடம் வைத்திருப்பார். அதே நோட்டின் மற்றொரு துண்டை கொண்டு வருபவர்களுக்கு பொருட்களைக் கொடுப்பார். பொருள் அல்லது பணப்பறிமாற்றம் இப்படி நடக்கும். இதே முறையை பயன்படுத்தி ரயில்வேயில் லஞ்ச ஊழல் நடைபெற்றுள்ளது. இது பத்து ரூபாய் நோட்டை அடிப்படையாகக் கொண்ட லஞ்ச ஊழல்.

லஞ்சம் தொடர்பான அனைத்து பண பரிவர்த்தனைகளும் பத்து ரூபாய் நோட்டு மூலம் செய்யப்பட்டன என்று அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) மேற்கொண்ட விசாரணையில் கண்டறிந்துள்ளது. இந்த மோசடியில் அப்போதைய ரயில்வே அமைச்சரின் மருமகனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பவன் குமார் பன்சல்-இன் (Pawan Kumar Bansal) மருமகன் விஜய் சிங்லா (Vijay Singla) சம்பந்தப்பட்டதாக ED தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. மேற்கு ரயில்வேயில் அந்த சமயத்தில் பொது மேலாளராக இருந்த மகேஷ் குமார் மற்றும் அரசு சாரா துறையைச் சேர்ந்த பலரின் பெயரையும் அமலாக்க இயக்குநரகம் (ED) பெயரிட்டுள்ளது.

பத்து ரூபாய் நோட்டு பொருள் மாற்றத்திற்கான அடையாளமாக பயன்படுத்தப்பட்டது:

1975 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே (Indian Railways) சிக்னலின் பணிபுரிந்த ஐஆர்எஸ்எஸ்இ (IRSSE) மகேஷ் குமார் லஞ்சம் வாங்கியதாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே வாரியத்தின் உறுப்பினர் (Electrical) பதவிக்கு நியமிக்க அவருக்கு லஞ்சம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பத்து ரூபாய் நோட்டு லஞ்ச பரிமாற்றத்திற்கான அடையாளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ED இந்த சாட்சியங்களைபதிவு செய்திருந்தது. 2019 ஜனவரி 10ஆம் தேதி, ED தனது நண்பரின் மனைவி மினாட்டி ஸ்டோர்மானி-இன் (Minati Stormani) விண்ட் டிரேடிங் (Wind Trading) நிறுவனத்தை நடத்தி வந்த சுபாஷ் பார்தியாவின் (Subhash Bhartia) அறிக்கையை ED பதிவு செய்தது. ரகுவீர் புவல்காவை 10-15 ஆண்டுகளாக தனக்குத் தெரியும் என்று பார்தியா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Also Read | வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என முதல்வர் நினைத்தால் அது அறியாமை!

2013 மே 3ஆம் தேதியன்று, ரகுவீர் புவல்கா டெல்லியில் 50 லட்சம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்தார். பிறகு இந்த செய்தியை தெரிவித்துவிட்டு, பத்து ரூபாய் நோட்டு (Ten-rupee)ஒன்றின் எண்ணை அவருக்கு அனுப்பினார். அந்த எண் கொண்ட பணத்தாளைக் கொண்டு வரும் நபருக்கு பணத்தை கொடுக்கவும் கேட்டுக் கொண்டார்.

இப்படி பத்து ரூபாய் பணத்தாளை வைத்து லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ள விவகாரம்  திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் வரும் காட்சிகள் நிதர்சனத்திலும் நடப்பதை உணர்த்தும் சம்பவம் இது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News