ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியில், ஆண்ட்ரே ரஸ்சல் 19 பந்துகளில் 49 ரன்கள் விளாச, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வெற்றிபெற 182 ரன்கள் இலக்கு
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சு...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12 வது சீசன் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் CSK - RBC அணிகள் மோதின. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. ஆர்சிபி கேப்டன் கோலி, 360 டிகிரி மன்னன் டிவில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரின் (3) விக்கெட்டை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்த போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. தோனி களமிறங்காதது ஏமாற்றத்தை தந்ததாகவும் போட்டியை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில், இன்று இரு போட்டிகள் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கின்றன.
இதில், முதல் போட்டியில் விளையாடும் இரு அணிகளும் பலம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகின்றது. கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, பெர்த்வெய்த், ஆன்ட்ரு ரசூல், கிரிஸ் லைன், குல்தீப் யாதவ், சுனில் நரைன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஹைதராபாத் அணியில் மீண்டும் டேவிட் வார்னர் வந்ததால் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. கேப்டன் வில்லியம்சன், சஹிப் அல் ஹசன், மார்டின் கப்டில், விஜய் சங்கர், யூசப் பதான் உள்ளிட்ட வீரர்கள் தங்களின் திறமையை காட்ட தயாராகவுள்ளனர். இதனால், இந்த போட்டி விறுவிறுப்பாகவும், அதிரடியாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதேபோல், மும்பை, டெல்லி மோதும் மற்றொரு போட்டியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பை அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, பொல்லார்ட், பாண்ட்யா பிரதர்ஸ், டி காக், இஷான் கிஷன் என்ற நட்சத்திர பட்டாளமே அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். முதல் 6 ஆட்டங்களில் மலிங்கா விளையாடமாட்டார் என்பது அந்த அணிக்கு பின்னடைவே. 6-ஆவது ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேர்ந்த யுவராஜ் சிங் எப்படி விளையாடபோகிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஐபிஎல் தொடரில் நல்ல வீரர்களை கொண்டு விளையாடி வரும் டெல்லி அணிக்கு கோப்பை எட்டா கனியாகவே இருந்து வருகிறது. இம்முறை பெயரை மாற்றி 'டெல்லி கேப்பிடல்ஸ்' என்ற பெயருடன் களமிறங்குகிறது. இந்த பெயர் மாற்றத்துக்கு பலன் கிடைக்குமா? என்று பார்ப்போம். அந்த அணியில் டெல்லியைச் சேர்ந்த ஷிகர் தவான் டெல்லி அணிக்கு வந்தது கூடுதல் பலம். ரிஷாப் பான்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ப்ரித்வி ஷா, கிரிஸ் மோரிஸ், போல்ட் ஆகிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.