தியோகர் கருவூல வழக்கில் லாலு யாதவுக்கு ஜாமீன்; ஆனாலும் சிறையில் தான் இருக்க வேண்டும்

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தேவ்கர் கருவூல வழக்கில் ஆர்.ஜே.டி தலைவருமான லாலு யாதவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 12, 2019, 04:19 PM IST
தியோகர் கருவூல வழக்கில் லாலு யாதவுக்கு ஜாமீன்; ஆனாலும் சிறையில் தான் இருக்க வேண்டும் title=

ராஞ்சி: தீவன ஊழல் வழக்கில், தண்டனை பெற்ற முன்னால் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவருமான லாலு யாதவுக்கு மிகுந்த நிம்மதி கிடைத்துள்ளது. கால்நடை தீவன ஊழல் விவகாரத்தில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தேவ்கர் கருவூல வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனாலும், அவர் சிறையில் தான் இருக்க வேண்டும்.

லாலு யாதவ் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு யாதவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. லாலு யாதவுக்கு ரூ.50,000 மதிப்புள்ள இரண்டு தனிப்பட்ட பத்திரங்களில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், ஜாமீன் பெற்ற பிறகும் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார். ஏனெனில் தீவன ஊழல் வழக்கில் தியோகர், தும்கா மற்றும் சைபாசா ஆகிய மூன்று வழக்குகளிலும் தண்டனை பெற்றுள்ளனர். தற்போது தியோகர் கருவூல வழக்கில் மட்டும் தான் ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் தும்கா மற்றும் சைபாசா வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே, தற்போதைக்கு அவர் சிறையில் தான் இருக்க வேண்டியிருக்கும்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் 7 ஆண்டும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 7 ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

லாலூ யாதவ் நீண்ட காலமாக சிறையில் இருக்கிறார், அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்தபோது, அவர் தொடர்ந்து ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. 

தற்போது அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், பலமுறை ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அது நிராகரிக்கப்பட்டது. இன்று தான் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

Trending News