'கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் 15 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதையடுத்து நாளை தண்டனை அறிவிப்பதாக கூறி தற்போது வழக்கு ஒத்திவைத்துள்ளது.
பீஹார் முதல்வராக, 1994 -1996-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், ரூ.89.27 லட்சம் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.
ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று தண்டனை விவரன் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ்வின் தண்டனை குறித்த விபரம் நாளை அறிவிப்பதாக கூறி மத்திய புலனாய்வு விசாரணை(CBI) தற்போது வழக்கினை ஒத்திவைத்துள்ளது.இதை தொடர்ந்து, இவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, தற்போது தீர்ப்பு அறிவித்தனர். லாலுவுக்கு சுமார் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், இந்த வழக்கிற்கு 5-லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்ற தண்டனை அறிவித்தது.
#FodderScam: Lalu Prasad Yadav sentenced to 3.5 years in jail and Rs 5 lakh fine by Ranchi Court pic.twitter.com/wi0Cibm93R
— ANI (@ANI) January 6, 2018