நாட்டில் கொரோனாவின் (Coronavirus) முதலாவது அலை, மூத்த குடிமக்களை அதிகம் பாதித்த நிலையில், பின்னர் வந்த இரண்டாது அலை இளைஞர்கள் நடுத்தர வயதினரை பெரிதும் பாதித்தது. இந்நிலையில், மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வரும் நிலையில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
லான்சென்ட் கோவிட் மிஷன் இந்தியா பணிக்குழு ஒரு நிம்மதி அளிக்கும் செய்தியை வழங்கியுள்ளது. இதுவரை உள்ள தரவுகளை ஆராய்ந்ததில், மூன்றாம் அலையில், குழந்தைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அப்பணிக்குழு கூறியுள்ளது. இந்த பணிக்குழு டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR), தமிழ்நாடு (Tamil Nadu), கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பத்து மருத்துவமனைகளின் தரவுகளை ஆராய்ந்து பின்னர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
மூன்றாவது அலைகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எய்ம்ஸின் மூன்று குழந்தைகளுக்கான மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து லான்சென்ட் சார்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,. ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டது. அறிகுறிகள் காணப்பட்டாலும், அவை லேசானவை அல்லது மிதமானவை என்ற அளவில் தான் உள்ளது., இக்குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனையுடன் வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படலாம் என்ற நிலை தான் உள்ளது.
ALSO READ | COVID-19 Update: 91,702 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள், 3,403 இறப்புகள்
ஆய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனாவின் இரண்டு அலைகளில் இதுவரை 2600 குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது என்றும், அதுவும் அந்த குழந்தைகளுக்கு நேரத்தில் நீரிழிவு, புற்றுநோய் ஓன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அல்லது இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஆரோக்கியமான குழந்தைகள் கொரோனா காரணமாக உயிர் இழக்கும் ஆபத்து மிகக் மிகக் குறைவு என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளில் இந்த அறிகுறிகளைக் கண்டால், மருத்துவரை அணுகவும்.
கொரோனா வைரஸ், காய்ச்சல், சளி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் பெரும்பாலான குழந்தைகளில் காணப்படுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதற்றம் அடையாமல் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால், குழந்தைகள் விரைவில் வீட்டிலேயே குணமடைவார்கள். அதுவும், 10 வயதுக்கு குறைவான குழந்தைகளில் தொற்றுநோய்க்கான ஆபத்து வயதானவர்களை விட குறைவாக இருக்கும்.
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய்களின் போது, பெரும்பாலான பெற்றோர்கள் DTP, நிமோகோகல், ரோட்டா வைரஸ் மற்றும் MMR போன்ற நோய்களுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்கு வழக்கமாக நோய்த்தடுப்பு மருந்துகள் போடப்பட்டவில்லை. இந்த நேரத்தில், கொரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து குழந்தைகளையும் தடுப்பூசி மையங்களுக்கு கூட்டி செல்ல பெரும்பாலான மக்கள் தவிர்த்தனர், இதன் காரணமாக இந்த அத்தியாவசிய தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போட முடியவில்லை. குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி போடுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | TN Corona Update: தமிழகத்தில் 15,108 பேருக்கு இன்று கொரோனா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR