TN Corona Update: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் தற்போது வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது
இதற்கிடையில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றின் (Coronavirus) பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் மட்டும் தினசரி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ALSO READ: TN Lockdown: ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன?
சனிக்கிழமை தமிழ்நாட்டில் 15,108 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,82,878 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 1,064 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 605 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
#TamilNadu | #COVID19 | 12 June
Today/Total - 15,108 / 23,39,705
Active Cases - 1,62,073
Discharged Today/Total - 27,463 / 21,48,352
Death Today/Total - 374 / 29,280
Samples Tested Today/Total - 1,82,878 / 2,97,90,743**
Test Positivity Rate (TPR) - 8.26%#TNCoronaUpdate #TN pic.twitter.com/oE7GHDJrsa— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 12, 2021
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 101 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 244 பேரும், தனியர் மருத்துவமனைகளில் 130 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவால் மேலும் 374 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 27,463 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 21,48,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,62,073 ஆக உள்ளது.
இன்று மாநிலம் முழுவதும் 25555 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24305 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 2539 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன என இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ALSO READ: vaccines: தமிழகத்திற்கு இன்று 3.65 லட்சம் தடுப்பூசி கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR