அரியானாவில் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெரும்; பாஜகவுக்கு ஜீரோ: ஹூடா

காங்கிரஸ் அரியானாவில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெரும் மூத்த காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 7, 2019, 02:04 PM IST
அரியானாவில் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெரும்; பாஜகவுக்கு ஜீரோ: ஹூடா

சோனிபட்: 2019 மக்களவைத் தேர்தல் ஆறாவது கட்டத்தில் அரியானாவில் உள்ள மொத்தம் 10 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 12) ஆம் தேதி வாக்குப் பதிவாக உள்ளது. கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைப் பெற்றது. பிஜேபி 7 மற்றும் இந்திய தேசிய லோக் தல் 2 இடங்களை வென்றது. 

2019 மக்களவைத் தேர்தல் குறித்து ஜீ மீடியா தொலைகாட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் மாநில முதல்வர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா கூறியது, 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் 9 இடங்களை காங்கிரஸ் வென்றது. ஆனால் இம்முறை மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெரும். தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இருமுனை போட்டி இல்லை. மக்கள் ஒரே பக்கம் தான் வாக்களிக்க போகிறார்கள். எனவே காங்கிரஸ் அரியானாவில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெரும் எனக்கூறினார். 

2019 மக்களவைத் தேர்தலில் சோனிபட் தொகுதியில் பூபிந்தர் சிங் ஹூடா போட்டியிடுகிறார். இதே தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் சந்திர கௌஷிக்கில் போட்டியிடுகிறார்.

More Stories

Trending News