அறுவைசிகிச்சை அறையில் சில்மிஷம் செய்த மருத்துவர் அதிரடி நீக்கம்!

உஜ்ஜெய் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில், செவிலியருக்கு முத்தம் கொடுத்த மருத்துவரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக நீக்கியுள்ளார்!

Last Updated : Jan 14, 2019, 11:39 AM IST
அறுவைசிகிச்சை அறையில் சில்மிஷம் செய்த மருத்துவர் அதிரடி நீக்கம்! title=

உஜ்ஜெய் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில், செவிலியருக்கு முத்தம் கொடுத்த மருத்துவரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக நீக்கியுள்ளார்!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய் மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கும் 49-வயது ஆண், தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் செவிலிய பெண் ஒருவருக்கு மருத்துவமனையில் வைத்து முத்தம் கொடுத்தாள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரை அதிரடியாக நீக்கி மாவட்ட ஆட்சியர் சஷாங் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். கோட்பாடுகளை மீறி செயற்பட்டதாக இவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்டு அறிவிப்பு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை., மருத்துவரின் விளக்கத்திற்கு பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்சம்பவம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக மருத்துவர் மருத்துவமனைக்கு வரவில்லை என மருத்துவமனை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 

மாவட்ட முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் (DCMHO) மோகன் மாலவிய இதுகுறித்து தெரிவிக்கையில்., இச்சம்வத்தின் மீதான விசாரணை சபை ஆணையாளரால் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது மருத்துவமனையில் தான் எடுக்கப்பட்டது என்பதற்கான தகவல்கள் உறுதி படுத்தப்படவில்லை, விசாரணைக்கு பின்னரே மற்ற விவரங்கள் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News