பீகார், அசாமில் வெள்ளம்: மத்திய பிரதேச அரசு நிதியுதவி

Last Updated : Aug 28, 2017, 02:51 PM IST
பீகார், அசாமில் வெள்ளம்: மத்திய பிரதேச அரசு நிதியுதவி title=

பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பீகாருக்கு 5 கோடியும் அசாம் மாநிலத்திற்கு 2 கோடி ரூபாயை மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரவித்துள்ளார்.

முன்னதாக நேற்று பீகார் மாநிலத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று மத்திய பிரதேச முதல் அமைச்சர் பீகார் மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் மற்றும் அசாம் மாநிலத்திற்கு 2 கோடியை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Trending News