Viral Video : ஜிம்மில் மாரடைப்பு... சரிந்து விழுந்து உயிரை விட்ட உணவக உரிமையாளர்

Viral Video : ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென தலைச்சுற்றி சரிந்து விழுந்து உயிரிழந்த நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து, மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 6, 2023, 09:44 AM IST
  • உடற்பயிற்சிக்கு முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என அறிவுரை.
  • ஆலோசனைகள் இன்றி புரதங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.
  • தற்போது இதுபோன்ற சம்பவம் அதிகரித்து வருகிறது.
Viral Video : ஜிம்மில் மாரடைப்பு... சரிந்து விழுந்து உயிரை விட்ட உணவக உரிமையாளர் title=

Viral Video : மத்திய பிரேதசத்தின் இந்தூரில் உள்ள  உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்துவந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரெட்மில் இயந்திரத்தில் பயிற்சி எடுத்தபின் கீழ் இறங்கிய உடனே, மாரடைப்பால் அவர் சரிந்து விழும் சிசிடிவி வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. 

உயிரிழந்தவரின் பெயர் பிரதீப் ரகுவன்ஷி என்றும் தனியாக உணவகம் நடத்தி வரும் இவருக்கு வயது 55 எனவும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பதிவான இந்த வீடியோவில், அவரின் இறுதி உயிர் மூச்சு வரை பதிவாகியுள்ளது. அதில், பயிற்சி எடுத்து வேர்க்க விறுக்கவிறுக்க, சட்டை முழுவதும் வியர்வையால் நிரம்பிவழிகின்றது. 

முதலில் அவருக்கு தலை சுற்றியது. அதனால், அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு மேசையை பிடித்து நிற்க முயன்றார். ஆனால், அவர் நிற்க முடியாமல் சரிந்து விழுந்தார். அவர் சரிந்து விழுந்ததை கண்டு, அங்கிருந்த ஜிம் பயிற்சியாளரும் மற்றவர்களும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Diabetes: என்ன செய்தாலும் சர்க்கரை குறையலையா... ‘இந்த’ விதையின் பொடி ஒன்றே போதும்!

உயிரிழந்த ரகுவன்ஷியை அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர், உடற்பயிற்சிக்கு முன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.  "வயதான ஒருவர் வேலை செய்வதற்கு முன் ஒரு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தற்போது அனைவரும் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தப் புரதத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது,'' என்றார்.

"பிரதீப் ரகுவன்ஷி எங்கள் நீண்ட கால வாடிக்கையாளர். அவர் தினமும் ஜிம்மிற்கு வருவார். இன்று, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, மூன்று நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது," என்று ரகுவன்ஷியின் ஜிம் பயிற்றுவிப்பாளர் கூறினார்.  பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர் பிரதீப்.

உடற்பயிற்சி செய்யும் போது ஒருவர் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக, பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவ் டிரெட்மில்லில் இருந்தபோது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தனது வழக்கமான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். மேலும் அவர் டிரெட்மில்லில் இருந்தபோது, ​​திடீரென கீழே விழுந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டில், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் (46) ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | விந்தணு தரத்தை பாதிக்கும் கொரோனா...? - ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News