கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் கடிமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் உள்ள அணைகள் முழுவதும் நிரம்பியதால், அணைகளில் இருந்த மதகுகள் திறக்கப்பட்டு அதிக அளவில் நீர வெளியற்றப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் வெள்ளம் ஏற்ப்பட்டு உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் இதுவரை 3 லட்சத்துக்கு அதிகமான பேர் வீடுகளை இழந்துள்ளனர். மே மாதம் 29 ஆம் தேதி முதல் நேற்று (ஆகஸ்ட் 17) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2094 நிவாரண முகாம்களில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்க வைக்கபட்டு உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு உட்பட பல மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவுக்கு தேவையான உணவு பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
CM @Dev_Fadnavis announces ₹20 crore as immediate assistance from Maharashtra Government for Kerala flood affected persons.
State Government is constantly in touch with Kerala Government for their requirements and the necessary support, since yesterday.#KeralaFloods— CMO Maharashtra (@CMOMaharashtra) August 18, 2018
MCHI-CREDAI is contributing with food packets of ₹1.5 crore, Rajasthani Welfare Association & JITO International contributing ₹51 lakh each.
Around 11 ton of dry food is being arranged so far out of of which 6 ton would be sent by evening. #KeralaFloodRelief— CMO Maharashtra (@CMOMaharashtra) August 18, 2018
அதுமட்டுமில்லாமல் அனைவரும் முன்னோக்கி வந்து கேரள மக்களுடன் நிற்கவும், அவர்களுக்கு உதவ அனைத்து வழிகளிலும் பங்களிப்பு செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.
CM @Dev_Fadnavis appeals everyone to come forward and stand firm with citizens of Kerala and contribute in all possible ways to help our fellow citizens. #KeralaFloods
— CMO Maharashtra (@CMOMaharashtra) August 18, 2018
முன்னதாக, பீகார் 10 கோடி, தெலுங்கான 25 கோடி, கர்நாடக 10 கோடி, பஞ்சாப் 10 கோடி, யூனியன் பிரதேசமான டெல்லி 10 கோடி, ஆந்திரா 5 கோடி, ஒரிசா 5 கோடி மற்றும் தமிழ்நாடு 10 கோடி என மாநிலங்கள் நிதியுதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.