கொரோனா வைரசால் ஏற்பட்ட சிக்கல்களால் காலமானார் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ்

சதீஷ் துபேலியாவின் சகோதரி உமா துபேலியா-மஸ்தாரி சதீஷ் இறந்ததை உறுதிப்படுத்தியதோடு, COVID-19 தொடர்பான சிக்கல்களால் தனது சகோதரர் இறந்தார் என்று கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2020, 10:22 AM IST
  • மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கொரோனா தொற்றால் ஏற்பட்ட சிக்கல்களால் காலமானார்.
  • அவர் தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தார்.
  • அவர் நிமோனியா நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்தார்.
கொரோனா வைரசால் ஏற்பட்ட சிக்கல்களால் காலமானார் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் title=

ஜோகன்னஸ்பர்க்: மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் கொரோனா வைரசால் ஏற்பட்ட உடல்நலச் சிக்கல்களால் காலமானார். அவருக்கு வயது 66.

அவர் தென்னாப்பிரிக்காவில் சமூக சேவையாளராக பணியாற்றி வந்தார். அவர் இறந்ததை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

நிமோனியா சிகிச்சையின் போது கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது

சதீஷ் துபேலியாவின் சகோதரி உமா துபேலியா-மஸ்தாரி இதை உறுதிப்படுத்தியதோடு, COVID-19 தொடர்பான சிக்கல்களால் தனது சகோதரர் இறந்தார் என்று கூறினார். தனது சகோதரருக்கு நிமோனியா இருந்ததாகவும், சிகிச்சைக்காக ஒரு மாதம் அவர் மருத்துவமனையில் இருந்ததாகவும், இந்த நேரத்தில் அவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டதாகவும் அவரது சகோதரி கூறினார்.

ALSO READ: நம் நாட்டில் உருவாக்கப்படும் COVID Vaccine-ன் இறுதி கட்ட சோதனைகள் விரைவில் முடியும்: Harsh Vardhan

மாரடைப்பால் காலமானார்

உமா துபெலியா ஒரு சமூக ஊடக இடுகையில், 'என் அன்பு சகோதரர் நிமோனியாவால் ஒரு மாதம் அவதிப்பட்டு காலமானார். மருத்துவமனையில் சிகிச்சையின் போது, ​​அவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டது.’ என்று கூறினார். ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக்கில் எழுதப்பட்ட ஒரு பதிவில், 'இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அந்த தாக்கத்தால் அவர் இறந்தார்' என்று உமா துபேலியா கூறினார்.

மூன்று நாள் முன்பு பிறந்த நாள்

மூன்று நாட்களுக்கு முன்பு சதீஷ் துபேலியாவின் பிறந்த நாள் இருந்தது. உமா துபேலியா தனது பதிவில், "சதீஷ் துபியா நவம்பர் 19, 1954 அன்று சஷிகாந்த் மற்றும் சீதா துபேலியாவின் மகனாகப் பிறந்தார்" என்று கூறினார். சதீஷ் துபேலியாவின் குடும்பத்தில் உமா மற்றும் கீர்த்தி மேனன் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்த மூவரும் மணிலால் காந்தியின் வாரிசுகள்.

தென்னாப்பிரிக்காவில் (South Africa) தனது பணிகளை முடிக்க மணிலால் காந்தியை அங்கேயே விட்டிவிட்டு மகாத்மா காந்தி இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: Covid-19 தடுப்பூசி குறித்த நல்ல செய்தி; அடுத்த மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News