கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் இன்று மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார். கொரோனா தொற்று காரணமாக இந்த பதவி எற்பு விழா ராஜ் பவனில் எளிமையாக நடைபெற்றது. தொற்று காரணமாக இந்த விழாவில் பங்கேற்க மிகச்சிலரே அழைக்கப்பட்டனர்.
மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டசார்ஜி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ALSO READ: மம்தா தோல்வியால் ஆத்திரம்; BJP அலுவலகத்தை கொளுத்திய TMC தொண்டர்கள்
நாட்டின் தற்போதைய COVID-19 நிலைமையை மனதில் கொண்டு மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை
இந்நிலையில் மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Mamata Banerjee takes oath as the Chief Minister of #WestBengal for a third consecutive term. She was administered the oath by Governor Jagdeep Dhankhar. pic.twitter.com/IXy05xNZPZ
— ANI (@ANI) May 5, 2021
முன்னதாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்த 292 தொகுதிகளில் உள்ளது. அதில் 213 தொகுதிகளில் மம்தா பானர்ஜி கட்சி வெற்றி பெற்றது. பாஜக 77 தொகுதிகளைப் பெற்றுள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து, பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. இவற்றில் பல பாஜக தொண்டர்கள் இறந்தனர், பலர் காயமடைந்தனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR