ஜல்லிக்கட்டு எதிராக மேனகா காந்தி மனுதாக்கல் செய்யவில்லை

Last Updated : Jan 23, 2017, 03:33 PM IST
ஜல்லிக்கட்டு எதிராக மேனகா காந்தி மனுதாக்கல் செய்யவில்லை title=

ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி இன்று மனுதாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி தவறானது என நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக நிர்மலா சீதாராம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-ஜல்லிகட்டு க்கு தடை கோரி  "மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு" என்று சில TV channelsல் வரும் செய்தி முற்றிலும் தவறு. மேலும் அமைச்சர் மேனகா காந்தியுடன் சில நிமிடங்கள் முன்னால் தொலைபேசியின் மூலமாக பேசிய போது தான் தடை கோரி மனு ஏதும் பதிவு செய்யவில்லை என நிர்மலா சீதாராம் கூறியுள்ளார்.

 

 

 

 

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தரப்பில் தனித்தனியாக 70 கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த கேவியட் மனுக்களில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தங்களை கருத்து கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News