பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் வர உள்ளது. இதை கவனித்தில் கொண்டு பாஜக-வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.
அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயார் எனவும் அறிவித்திருந்தார். அதைக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது பகுஜன் சமாஜ் கட்சி.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே இந்த முடிவை மாயாவதி எடுத்து இருப்பதாக தகவல் வந்துள்ளன.
இன்று பாஜக-வை எதிர்த்து அமைக்கப்படும் கூட்டணியில், தங்களுக்கு மரியாதைக்குரிய எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கும்" என்று மாயாவதி டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
ஏற்கனவே தங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் ராகுல் காந்தியை விமர்சிக்க கூடாது என்றும், மீறினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.