'மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர்' காங்கிரஸ் எம்பி அதிரடி... வாயடைத்து போன ரசிகர்கள்

மெஸ்ஸி இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி ஒருவர் போட்டிருந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 19, 2022, 06:27 PM IST
  • அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்றது.
  • மெஸ்ஸி தனது முதல் உலகக்கோப்பையை கைகளில் ஏந்தினார்.
  • மெஸ்ஸிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து.
'மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர்' காங்கிரஸ் எம்பி அதிரடி... வாயடைத்து போன ரசிகர்கள் title=

கத்தாரில் நடைபெற்ற 2022 பிபா உலகக்கோப்பை தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 1978, 1986 உலகக்கோப்பை தொடருக்கு பின், சுமார் 36 ஆண்டுகளுக்கு கழித்து அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றிருக்கிறது. 

மேலும், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது 26ஆவது உலகக்கோப்பை போட்டியை நேற்று விளையாடினார். அதன்மூலம், அதிக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி ஆண் வீரர் என்ற சாதனை பெற்றார். நேற்றைய இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அனைத்து நாக்-அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

அர்ஜென்டினா மட்டுமின்றி உலகமே மெஸ்ஸியின் வெற்றியையும், சாதனையையும் கொண்டாடி வந்த நிலையி், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் மெஸ்ஸிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். 

மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டார் மெஸ்ஸி... அர்ஜென்டினா சாம்பியன்

அந்த வகையில், அசாமின் காங்கிரஸ் எம்.பி., அப்துல் காலிக் என்பவர், பிபா உலகக்கோப்பையை கைப்பற்றியதற்காக மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இதுகுறித்து, இன்று காலை அவர் போட்டிருந்த ட்வீட்டில், மெஸ்ஸி உலகக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்துடன்,"அடி மனதில் இருந்து பாராட்டுகிறேன். உங்களுக்கு அசாமிற்கும் உள்ள தொடர்பை கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம்" என பதிவிட்டிருந்தார். 

Messi

இதற்கு, ஒரு ட்விட்டர் பயனளார்,"அசாம் உடன் தொடர்புடையவரா, எப்படி?" என கேள்வியெழுப்ப, அதற்கு,"மெஸ்ஸி அசாமில் பிறந்தவர்" என எம்.பி., அப்துல் காலிக் பதிலளித்திருந்தார். தொடர்ந்து, அவரின் பதிலை பலரும் பகடி செய்ததை தொடர்ந்து, அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். 

இருப்பினும், அதற்கு முன்பாகவே பல ட்விட்டர் பயனாளர்கள் அவரின் பதில் ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவைத்தனர். அந்த ட்வீட்டின் புகைப்படங்கள்தான் வைரலாகி வந்தன. தொடர்ந்து அந்த ட்வீட் வைரலாவதை கண்ட அப்துல் காலிக்,"வதந்தி பரப்புவதற்கு முன்னால், அனைவரும் எனது ட்விட்டர் பக்கத்தையும், பேஸ்புக் பக்கத்தையும் பார்க்க வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனாலும், நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

அதாவது, முதலில் தவறான தகவலை பதிவிட்ட பின்னர், தவறை உணர்ந்து நீக்கவிட்டதாகவும், ஆனாலும் அந்த தவறை பொதுவெளியில் ஒத்துகொள்ள மறுக்கிறார் என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு? மெஸ்ஸியின் இனிப்பான பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News