Muthoot Finance குழுமத் தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்: தலைசிறந்த தலைவருக்காக வருந்தும் குழுமம்

வளமான, செல்வச்செழிப்பில் பிறந்திருந்தாலும், ஜார்ஜ் முத்தூட் சிறு வயதிலிருந்தே விடா முயற்சிக்கும், உழைப்புக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 6, 2021, 06:23 PM IST
  • முத்தூட் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.
  • அவருக்கு வயது 72.
  • முத்தூட் ஃபைனான்ஸ் ஒரு மிகபிரபலமான நிதி நிறுவனமாகும்.
Muthoot Finance குழுமத் தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்: தலைசிறந்த தலைவருக்காக வருந்தும் குழுமம்  title=

முத்தூட் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 72. நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது. அவர் தனது வீட்டில் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாகவும், பின்னர் டெல்லியின் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மாலை 6:58 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக அவர் இறந்தார்.

முத்தூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance) ஒரு மிகபிரபலமான நிதி நிறுவனமாகும். வங்கி அல்லாத மிகப்பெரிய தங்கக் நிதி நிறுவனங்களில் ஒன்றான முத்தூட் ஃபைனான்ஸ் மிகப்பெரும் நன்மதிப்பை ஈட்டியுள்ள குழுமங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

ஜோர்ஜ் முத்தூட் தனது குடும்பத்திலிருந்து முத்தூட் குழுமத்தின் தலைவரான மூன்றாவது தலைமுறை நபராவார்.

ALSO READ: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு!

இந்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அறங்காவலராக இருந்த அவர், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) தேசிய செயற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

அவர் FICCI கேரள மாநில கவுன்சிலின் தலைவராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஆறு மலையாளிகளில் ஜார்ஜ் முத்தூட் ஒருவராக இருந்தார். ஃபோர்ப்ஸ் ஆசியா இதழ் அவரை 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் 50 வது பணக்காரர் என்று பட்டியலிட்டது. மேலும் 2019 ஆம் ஆண்டில், அவரது இடம் இந்தியாவில் 44 வது பணக்காரராக உயர்ந்தது.

அவர் 1979 இல் முத்தூட் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், 1993 இல் அதன் தலைவராகவும் ஆனார். 5,000 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடன் நிறுவனமாக முத்தூட் நிதி நிறுவனம் உள்ளது.

இவரது மனைவி சாரா ஜார்ஜ் முத்தூட் ஆவார். இவரது மகன்கள் ஜார்ஜ் எம். ஜார்ஜ் நிர்வாக இயக்குநராகவும் அலெக்சாண்டர் ஜார்ஜ் குழு இயக்குநராகவும் உள்ளனர்.

ஜோர்ஜ் முத்தூட் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். அவர் முதன் முதலாக குடும்ப வங்கியில் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், 1979 இல், அவர் வங்கியின் நிர்வாக இயக்குநரானார். வளமான, செல்வச்செழிப்பில் பிறந்திருந்தாலும், அவர் சிறு வயதிலிருந்தே விடா முயற்சிக்கும், உழைப்புக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கினார். முத்தூட் ஃபைனான்சுக்கு மக்கள் மனதில் இருக்கும் நல்லெண்ணத்துக்கு அவரது அணுகுமுறையும் ஒரு பெரும் காரணமாக பார்க்கப்படுகின்றது. அவரது மறைவுக்கு தொழிதுறை நபர்களும், பல தொழிலதிபர்களும், பொது மக்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: DMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஒப்பந்தம் இறுதியானது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News