#ElectionResults: மிசோரமில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்; MNF ஆட்சி அமைக்கிறது

மிசோரமில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியை இழந்த காங்கிரஸ்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2018, 03:38 PM IST
#ElectionResults: மிசோரமில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்; MNF ஆட்சி அமைக்கிறது title=

மிசோரம், தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மிசோரம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் மிஸோ தேசிய முன்னணிக் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. எம்.என்.எப் கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். 

மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் மிஸோ தேசிய முன்னணிக் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. 

 

கடந்த 10 ஆண்டுகளா ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை தழுவியுள்ளது. மிசோரம் முதல்வர் காங்கிரசு தலைவர் லால் தானஹவ்லா, காங்கிரசுக்கு மீண்டும் பதவிக்கு வரும் எனக் கூறியிருந்தார். இவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் தோல்வியுற்றார். 

மிசோரம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, சில முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, எம்.என்.எப் கட்சி மற்றும் பாஜகவில் இணைந்தனர். இதனால் தான் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ் கட்சி என கூறப்படுகிறது.

 

மிசோரம் மாநிலத்தை பொருத்த வரை, இதுவரை எந்த கட்சியும் மூன்றாவது முறையாக ஆட்சிக்குத் திரும்ப வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News