Rahul Gandhi: யாரும் வற்புறுத்தல! அதானி தொடர்பான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுக்கும் GVK

Rahul Gandhi on Adani: மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க ஜி.வி.கே.யை வற்புறுத்தினார் என்று ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதை, ஜி.வி.சஞ்சய் ரெட்டி கடுமையாக மறுத்திருக்கிறார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2023, 03:36 PM IST
  • மும்பை விமானநிலையம் தொடர்பான ராகுல்காந்தி குற்றச்சாட்டு
  • மோடி அரசோ அதிகாரிகளோ எங்களை வற்புறுத்தவில்லை
  • GVK நிறுவனம் ராகுல்காந்திக்கு தெளிவுபடுத்தியது
Rahul Gandhi: யாரும் வற்புறுத்தல! அதானி தொடர்பான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுக்கும் GVK

நியூடெல்லி: மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க ஜி.வி.கே.யை வற்புறுத்தினார் என்று ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதை, ஜி.வி.சஞ்சய் ரெட்டி கடுமையாக மறுத்திருக்கிறார். மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க, பிரதமரோ அல்லது மத்திய அரசு நிர்வாகமோ ஜி.வி.கே.யை வற்புறுத்தவில்லை என்று, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ஜிவிகே துணைத் தலைவர் மறுத்துள்ளார்.

ஜூலை 2021 இல், ஜிவிகே மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. சிபிஐ மற்றும் ஈடி போன்ற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி ஜிவிகேயிடம் இருந்து "இந்தியாவின் மிகவும் லாபகரமான விமான நிலையத்தை" மோடி அரசாங்கம் "கடத்தி" அதானிக்கு வழங்கியதாக காந்தி முன்பு குற்றம் சாட்டினார். ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை, ஜிவிகே துணைத் தலைவர் மறுத்துள்ளார். 

மேலும் படிக்க | RBI Monetary Policy: இனி எல்லா பொருட்களின் விலையும் கூடும்! ரெப்போ ரேட் அதிகரித்தது!

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கின. நேற்று, (2023, பிப்ரவரி 8 செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

நேற்று மதியம் மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார்.. இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பிரதமருக்கும் அதானிக்கு என்ன தொடர்ப்பு..? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்று கேள்வி எழுப்பினார். 

2014ம் ஆண்டில் 8 பில்லியன் டாலர் வைத்திருந்த அதானி, 2022ம் ஆண்டுக்குள்140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார். பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானிக்கு, எப்படி பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி,  ஹின்டன்பர்க்  அறிக்கைக்கு எதிராக அதானி குழுமம் வெளியிட்ட பதில் அறிக்கை ஆச்சரியமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?

ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இந்தியாவின் மீது, அதன் சுதந்திரத்தின், அதன் நேர்மையின், இந்திய நிறுவனங்களின் தரத்தின் மீதான தாக்குதல். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஆதர்சங்களின் மீதான தாக்குதல் என்று அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

மக்களிடம் பணம் பெற்று அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பெரும்பாலும் அதானி பங்குகள் பக்கம் போகவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதானிக் குழுமத்தின் மீது எழுந்திருக்கும் புகார்கள் தொடர்பாக, கூட்டுப் நாடாளுமன்றக் குழுவின் விசாரணை துவங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டு ஊடக சந்திப்பு நடத்தி இருக்கின்றன.

அதானி குழுமத்தின் மீதான அறிக்கையின் காரணமாக, பிரிந்துகிடந்த அரசியல் கட்சிகள் கை கோர்த்து செயல்பட முடிவெடுத்திருக்கின்றன என்பது அதானி குழுமம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் நிலைப்பாட்டிற்கான வலுவான எதிர்வினையாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க: 'சாதியை உருவாக்கியது கடவுள் இல்லை.. அர்ச்சகர்கள் தான்' - சொல்வது ஆர்எஸ்எஸ் தலைவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News