சீன அரசு 24 மணி நேரத்தில் என்ன செய்கிறதோ அதை செய்வதற்கு மோடி அரசு 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது என சீனாவை ராகுல் காந்தி புகழ்ந்து பேசினார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் முறையாக சென்றுள்ளார். லக்னோ விமான நிலையத்துக்கு வந்த ராகுல் காந்தியை தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அதன் பின், லக்னோவில் இருந்து பரேலி நோக்கி ராகுல் காந்தி காரில் பயணம் செய்தார். அப்போது, லக்னோ- ரேபரேலி எல்லையில் அமைந்துள்ள டீக்கடை ஒன்றில் இன்று காலை டீ குடித்தார்.
அதை தொடர்ந்து, 2வது நாளாக தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, தொண்டர்கள் இடையே பேசினார்.
சீன அரசு 24 மணி நேரத்தில் என்ன செய்கிறதோ அதை செய்வதற்கு மோடி அரசு 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது என்று சீனவை புகழ்ந்து பேசினார். சமீபத்தில் சீன தூதரை ராகுல் தனியாக சந்தித்தது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ராகுல், சீனாவை புகழ்ந்து பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராகுலின் இந்த பேச்சிற்கு உள்ளூர் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அமேதி தொகுதியில் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
No matter what happens, food park will be built here & I will do this work. As soon as our government comes into power, food park will be made & farmers' products will be sold here at the right prices. I will make this happen: Rahul Gandhi in #Amethi pic.twitter.com/GKbIXaJtsP
— ANI UP (@ANINewsUP) January 15, 2018